Breaking
Fri. Nov 22nd, 2024

‘வற்’ (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) அதிகரிப்புக்கான தீர்மானத்தைக் கைவிடுமாறு, இடைக்காலத் தடையுத்தரவை உயர்நீதிமன்றம், நேற்றுப் (12 பிறப்பித்தது.

மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், வரி அதிகரிப்பைக் கைவிடவேண்டும் என்றும், அவ்வாறு மேற்படி இரண்டு வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் கட்டளையிட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட இவ்விரு வரி அறவீடுகளும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதாக, மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, 11 சதவீதமான வற் அறவிடப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார்.

By

Related Post