Breaking
Mon. Dec 23rd, 2024

எவன் கார்ட் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று புதன்­கி­ழ­மையும் விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளது.
கலந்­து­ரை­யா­டலில் பாது­காப்­புத்­து­றையை சார்ந்த தரப்­பினர் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் சிலரும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொள்­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நேற்று முன்­தினம் இடம்­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே இவ்­வாறு இன்­றைய தினம் கலந்­து­ரை­யா­டலை நடத்­து­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.
மேலும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என இந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூறி­யி­ருந்தார்.
அந்­த­வ­கை­யி­லேயே இந்த விவ­காரம் குறித்து இன்­றைய தினம் இந்த விசேட கலந்­து­ரை­யாடல் நடை­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் எவன்ட் கார்ட் விவ­கா­ரத்­தைக்­கொண்டு நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post