கல்குடா தொகுதியின் மூத்த சட்டத்தரணியும் எமது பிரதேசத்தின் சிறந்த கணிதபாட ஆசானுமாகிய எம்.பி.எம்.ஹுசைன் சேரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இன்று (14.08.2017) திங்கட்கிழமை காலை வபாத்தான ஓட்டமாவடியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் பதில் நீதவானும் முன்னாள் கோறளைப்பற்று காழி நீதிபதியுமான எம்.பி.எம்.ஹுசைனின் மறைவை முன்னிட்டு பிரதி அமைச்சரி விடுத்துள்ள அனுதாப செய்தியிலலே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து கருத்து தெரித்துள்ளதாவது.
எங்களை விட்டுப்பிரிந்த சட்டத்தரணி எம்.பி.எம்.ஹுசைனின் மிகவும் எழிமையாக நம்மிடையே வாழ்ந்த ஒருவராகும். அவர் காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட ஒருவராக இருந்த போதிலும் கூட 1990ம் ஆண்டு வட கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதிகளால் இனப்படுகொலைகள் மற்றும் சொந்த இடங்களை விட்டு வெளியேற்றம் நடைபெற்ற போது எமது பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் இருப்பு தொடர்பாகவும் எமது பிரதேசத்தின் முக்கயஸ்தர்களுடன் இணைந்து பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்புக்காக பாடுபட்ட ஒருவராகும்.
இதே போன்று கல்குடா பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் உறுவாக்கத்திற்கு பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதனை இச் சந்தர்ப்த்திலே தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
அவரது மரண செய்தி எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது எல்லாம் வல்ல இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக எனப் பிராத்திக்கின்றேன் என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.