Breaking
Thu. Dec 26th, 2024

சம்மாந்துறை கல்வி வலயத்தில் தற்காலிக கொட்டில்களில் இயங்கும் வகுப்பறைகளை நிரந்தர கட்டிடங்களாக அமைத்துதருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதிமொழி வழங்கியதாக செந்நெல் சாஹிரா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் குறிப்பிட்டார்.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாடவிதானச் செயற்பாடுகளுக்கு வழங்குகின்ற முக்கியத்துவத்திற்கு அப்பால் விளையாட்டு போன்ற இனைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது ஆளுமைகளை வளர்த்துக்கொண்டு சமூகம் மதிக்கின்ற நற்பிரஜைகளாக திகழ முடியும்.இவ்வருடத்தில் அரசாங்கம் கல்விக்காக மிகக் கூடுத்லான நிதியை ஒதிக்கீடு செய்துள்ளது. இதன் மூலமாக இப்பாடசாலையின் சுற்று மதிலையும், விளையாட்டு மைதானத்தையும் புணரமைப்பதோடு செந்நெல் கிராமத்துக்கு அழகுசேர்க்கும் வண்ணம் இப்பாடசாலையின் நுழைவாயிலை எழில்கொஞ்சும் வகையில் அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன்.

சம்மாந்துறை கோட்டத்தின் கடந்த 8 ஆண்டுகளின் கல்வி அடைவுமட்டத்தை ஆய்வுக்குட்படுத்தி எதிர்வரும் காலங்களில் நமது அடைவுமட்டத்தை உயர்வுபடுத்தும் வகையில் இறைவனின் உதவியால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றேன். செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த ஏழைமானவர்கள் உயர்கல்வியைத் தொடர நீண்ட தூரம் கால்நடையாக பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இப்பாடசாலையை இவ்வருடம் முதல் தரமுயர்த்தி தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை வலயக் கல்விப் பணிப்பாளருடன் மாகாணக் கல்விப் பணிப்பாளருடனும் இணைந்து முன்னெடுக்க இருக்கின்றேன். இப்பாடசாலையின் அதிபரோடு இணைந்து ஆசிரியர் குழாத்தினர் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இப்பிரதேசத்தின் தலைசிறந்த பாடசாலையாக செந்நெல் சாஹிராவை மாற்றுவதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக தனது உரையில் பாராளுமன்ற உறுப்பினர் குரிப்பிட்டார்.

Related Post