ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்த கேரத் – இந்த நாட்டின் தலைவர் பொய்யளவில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை விட்டு இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் பலஸ்தீன நாட்டுக்காகவும் அந்த மக்களுக்காகவும் இலங்கை பாடுபட்டு அவர்களது விடிவுக்காக உலகிலும் உள்ளுரிலும் குரல் கொடுக்கும் ;தீர்மாணத்தை வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்படுத்த வேண்டும். வெறுமனமே பேச்சளவில் பலஸ்தீனத்துக்கு நிதி வழங்கினோம். பாதை திறந்தோம் என்று செல்வதைவிட்டு இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் சகல கட்சிகள் மக்கள் பிரநிதிகள் ஊடகாக அதனை அமுல்படுத்தவேண்டும். வெளிநாட்டுக் கொள்கையில் இஸ்ரேவேல் நாடுக்கும் சகல செயற்பாட்டுக்கும் ;இந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் முஸ்லீம் நாடு என்ற இனப்பாகுபாடு இல்லாமல் அநியாகமாக அழிக்கப்படும் அப்பாவி மக்களுக்கும் சிறுவர்களுக்கும் அந்த உயிர் இனங்களுக்காகவே நாம் பாடுபடுவதற்கு சகலரும் முன்வருதல் வேண்டும். ;அதற்காக ஜே.வி.பி குரல் கொடுக்கத் தயார் என உரையாற்றினார்.
அஷ்ரப் ஏ சமத்
இன்று கொழும்பு ஆவண நூலக கேட்போர் மண்டபத்தில் பலஸ்தீன் இலங்கை நற்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மார்கார் தலைமையில் ஜக்கிய நாடுகளில் பலஸ்தீனுக்கு உலக ஒறுமைப்பாடு தினமான இன்றைய 29-11-2014 நிகழ்வை முன்ணிட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கலந்து கொண்டார். ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பிணர் ருவான் விஜயவர்த்தன, ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்த கேரத், பலஸ்தீன் தூதுவர் சுகையிர் ஹம்துல்லாஹ் சலாட் ஆகியோறும் உரையாற்றினார்கள். அரபுநாடுகளின் தூதுவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டணர்.
இந் நிகழ்வின்போது இம்தியாஸ் பாக்கீர்மாக்கார் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது எகிப்திய நாட்டின் இலங்கைத் துர்துவர் அவரது பேச்சை இடைமறித்து தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து விவதத்தில் ஈடுபட்டார். இந் நிகழ்வில் பலஸ்தீன முஸ்லீம்களுக்காக எகிப்து நாடு தமது எல்லையை அகதிகள் செல்ல முடியாமல் முடி வைத்துள்ளார்கள் என்ற பேச்சுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தார். பலஸ்தீன காசா மக்கள் பார்காப்புத்தேடி எகிப்து செல்லும் மக்களுக்காக தமது பாதையை முடிவைத்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டதையடுத்தே அவர் விவாதத்தில் ஈடுபட்டார்.
எகிப்தில் 6000 பலஸ்தீனியர்கள் தங்கி உள்ளனர். அடுத்த 1000பேர் இந்த எல்லையை ஊடக எகிப்துக்கு சென்றுள்ளனர். என எகிப்திய தூதுவர் வாதாடினாh. சிரேஸ்ட ஊடகவியாளார் லத்தீப்பாருக் பலஸ்தீனர்களுக்காக அரபு நாடுகள் என்ன செய்தது, இந்த இலங்கை மக்களுக்கு இருக்கின்ற அக்கரை அரபுநாடுகளுக்கு இல்லை. என்ற கேள்விகளை கேட்டு விவாதத்தில் ஈடுபட்டதை காணக்கிடைத்தது.