Breaking
Sat. Dec 21st, 2024

– ஏ.எஸ்.எம்.ஜாவித் –

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தங்கள் என்பது யாருக்கும் சொல்லிக் கொண்டு வருவதில்லை இதன் காரணமாகவே மனிதன் உற்பட உயிரினங்கள் அனைத்தும் அதன் அகோரத்தினை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தம் என்பது பூகம்பமாகவோ, தீயாகவோ, வெள்ளம் மழை காரணமாகவோ அல்லது கடுங் குளிர் அல்லது பனிமூட்டம் காரணமாகவோ ஏற்படலாம். இவை காரணமாக பூமியில் வாழும் உயிரினங்களின் இயல்பு வாழ்வில் ஏற்றத்திற்கு மாற்றமான முறையில் அவை நிகழ்ந்து விடுகின்றன. இவ்வாறு எதிர்பாராத வகையில் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிர்கள், உடமைகள், உறவுகளை மனித சமுகம் இழக்க வேண்டிய ஆபத்தான நிலைமைகளுக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு நிகழும் அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்கள் பாதிக்கப்படாத மக்கள் அனைவரதும் தலையாய கடமையாகும். இதுவே மனிய நேயமுமான செயற்பாடுகளாகும். இவ்வாறு உதவுவதன் காரணமாகவே மனித சமுகம் மனித சமுகமாக வாழும் உன்னதமான விடயம் முன்னிலைப் படுத்தப்படுகின்றது எனலாம்.

மனிதன் மனித சமுகமாக வாழும்போதே அதன் மகிமையும், கௌரவமும் எல்லோரிடத்திலும் பிரதிபலித்து அமைதியும், சமாதானமும் ஏற்பட்டு ஒற்றுமையாக வாழ முடியும். ஆனால் இந்த நல்ல சிறப்பம்சங்களை கொச்சைப்படுத்தி அதன் மகிமைகளையும், கௌரவங்களையும் இல்லாதொழிப்பதற்கு ஒருசில தீய இனவாத சக்திகள் சமுகத்தில் இருப்பதானது ஏனையவர்களுக்கு பாரியதொரு அச்சுறுத்தலாகவும், ஆபத்தான விடயங்களாகவும் இருக்கின்றமை சமாதான விரும்பிகள் இடத்தில் கவலையைத் தோற்று வித்துள்ளது.

சமயத்தினைப் பாதுகாக்கின்றோம், நாட்டைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் நாட்டில் சமுகங்களுக்கிடையில் அமைதியின்மைகளை ஏற்படுத்தி வரும் இனவாதக் தீய கும்பல்கள் குறிப்பாக கலகொட அத்த ஞானசாரர் தலைமையிலான பொதுபல சேனா, இராவண பலய, சிங்கள ராவய போன்றவையும், கம்மன்வில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களும் மக்கள் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிப்பதாக கூறிக் கொண்டு தமது அரசியல் சுய இலாபங்களுக்காக கபட நாடகமாடி சமுகத்தினை சீரழித்து வரும் மேற்படி குழுவினரின் மக்கள் நலன் சேவைகள் தற்போது மக்கள் மத்தியில் அவர்கள் யார்? என்பதும், அவர்களின் சுயரூபம் என்ன? என்பதும் இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக நாடு பூராகவும் ஏற்பட்டிருந்த சீரற்ற கால நிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் பல இலட்சக் கணக்கான மக்கள் சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து பாடசாலைகள், மத ஸ்தளங்கள், பொது மண்டபங்கள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து இன்று வரை தமது சொந்த வீடுகளில் வசிக்க முடியாத அவல நிலையில் உணவுக்காகவும், உடுத்தும் உடைகளுக்காகவும் ஏங்கித் தவிக்கின்ற நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவலப்படும் மக்களின் நலன்களில் உண்மையான அன்பும், பாசமும் இருந்திருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டிய நிலையில் அம்மக்களைப் பாதுகாக்க முன் வந்திருக்க வேண்டும். வெள்ள அனர்த்தத்தினை உலகறிந்த சம்பவங்களாக இருக்கையில் ஒன்றுமே நடக்க வில்லை என்ற போர்வையில் இனவாதக் குழுக்கள் கபடித் தனமாக இருப்பதையும் இன்று கண்டு கொள்ள முடிகின்றது.

பாதிக்கப்பட்ட தமது சமுகத்திற்குக் கூட குரல் கொடுக்க வக்கில்லாத வங்குறோத்து கலாச்சாரத்தினைக் கொண்ட தீய இனவாத சக்திகள் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? என்பதனை தீர்மாணிக்கும் நல்லதொரு சந்தர்ப்பத்தினையும், அதற்கான உறுதிப்பாட்டை எடுப்பதற்கும் தற்போதைய வெள்ள அனர்த்தம் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

இடர்களும், துன்பங்களும் ஏற்படும்போது அதற்கு உதவுவதையே அனைத்துச் சமயங்களும் எடுத்தியம்புகின்றன. அதுவே மனித செயற்பாடுகளும் கூட ஆனால் பௌத்த சமயத்தினை கற்றுவிட்டு காவி உடைகளையும் அணிந்து கொண்டு மக்களையும், சமயத்தினையும் ஏமாற்றும் கலாச்சாரம் கொண்டவர்களை இனியாவது சமுகத்திலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட சகல சமுகத்தினதும் கோரிக்கைகளாகும்.
இனவாதிகள் அமைதியான சூழலில் தத்தமது இனவாதக் கூடுகளில் இருந்து வெளியே வந்து சிறுபான்மைச் சமுகங்கள் மத்தியியல் அவர்களுக்கு எதிராக அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்து கபடித்தனம் காட்டி வரும் கடும்போக்குவாத கும்பல்களின் கண்களுக்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களைக் கண்டு கொள்ளாதிருப்பதானது அவர்களின் கபடித் தனங்களின் உச்சக் கட்டத்தையல்லவா வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு சமுகத்தினை நல்ல வழயில் வழி நடத்த வேண்டியவர்கள் என்ற விடயத்தில் முதன்மையானவர்கள் மதப் போதகர்கள். இவர்கள் சமுகத்தின் நலன்களிலும், இறைவனுடனான தொடர்பினை மக்கள் சிறந்த முறையில் ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஒரு பாலமானவர்களாக இருக்க வேண்டியவர்களாகும்.

இயர்க்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு அவதிப்படும் மக்களைக் கண்டு உதவி செய்ய முன்வராத நாதியில்லாத நிலையில் இருக்கும் இனவாதிகள் அனர்த்தத்தில் தத்தளிக்கும் தமது சமுகத்தினையே கண்டு கொள்ளாத நிலை அவர்களின் இழிவு நிலைமைகளையே காட்டி நிற்கின்ற விடயத்தையே தற்போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் மீது பொதுபல சேனா மேற்கொண்ட மனித நேயமற்ற செயற்பாடுகள் எல்லாம் இன்று வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாக இருக்கின்றன. குறிப்பாக தெற்கில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைக் கலாச்சாரம், அவர்களின் உடமைகளை சூறையாடியமை, சேதமாக்கியமை போன்ற விடயங்களை எல்லாம் இலங்கை வாழ் மக்கள் யாரும் இலகுவில் மறந்து விடமுடியாது என்பதே உண்மையாகும்.

இவ்வாறான மனித நேயமற்றவர்களிடத்தில் இருந்து சகல மக்களையும் பாதுகாக்க வேண்டிய காலமே தற்போது கணிந்துள்ளது. இனவாதிகள் யாhர்? அவர்களின் பொய் முகங்கள் என்ன? என்பதனை அம்பலப் படுத்த வேண்டியுள்ளது. நாட்டையும், நாட்டு மக்களையும் குழப்பும் குழப்பவாதிகள் தற்போதைய அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் செத்தாலென்ன, பொலச்சால் என்ன என்று இருக்கும் விடயத்தில் தகுந்த பாடம் புகட்ட வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்தி தீய சக்திகளை ஒழிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் இனவாதத்தை ஒழிக்க நல்லதொரு சகுனமாகவே அமைந்துள்ளது. காரணம் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து அவர்களின் தராதரம் பார்க்காது சமுக நிறுவனங்களும், பள்ளிவாபசல்களும், விஹாரைகளும் செயற்பட்ட விதங்கள் இன ஒற்றுமையை வழியுறுத்தும் சிறந்த செயற்பாடுகளாகவே அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையையும், சமாதனத்தையும் விரும்புவதை வழியுறுத்துவதுடன் எமக்குல் சாதி, மத பேதங்கள் வேண்டாம் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற உயரிய பண்பினை வெளிப்படுத்தியிருப்பதனையே காட்டி நிற்பதாக சமுக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனர்த்தங்களின் போதல்லாமல் எல்லாக் காலங்களிலும் சமுக ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்பதே இனிவரும் காலங்களில் இலங்கை மக்களுக்குத் தேவையான விடயங்களாகும், கடந்த பல தஸாப்தங்களாக இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற கூ10ழ் நிலைகளுக்கு இனவாதமே பிரதான காரணமாக இருந்துள்ளது என்பதனை நாம் அனுபவ ரீதியாக கண்டு கொண்டோம்.

இனியும் இந்த நாட்டில் இனவாத சக்திகளுக்கு இடங்கொடுக்காது அவர்களின் சகல தீய நடவடிக்கைகளையும் முடக்கி அவர்களை சமுகத்திலிருந்து ஓரங்கட்டும்போது எதிர் காலத்தில் இலங்கையில் இன ஒற்றுமை என்பது மேலும் வழுப்பெற்று சிறந்ததொரு சமுதாயத்தினை இந்த நாட்டில் கட்டியெழுப்பலாம்.

எனவே அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழுவதற்கான சூழலை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டிய விடயமே இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த வகையில் அனைவரதும் ஒத்துழைப்பு என்பது இன்றியமையாதாகும். அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள்.

இயர்க்கை அனர்த்தங்கள் என்பது யாருக்கும் சொல்லிக் கொண்டு வருவதில்லை இதன் காரணமாகவே மனிதன் உற்பட உயிரினங்கள் அனைத்தும் அதன் அகோரத்தினை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன.

இயர்க்கை அனர்த்தம் என்பது பூகம்பமாகவோ, தீயாகவோ, வெள்ளம் மழை காரணமாகவோ அல்லது கடுங் குளிர் அல்லது பனிமூட்டம் காரணமாகவோ ஏற்படலாம். இவை காரணமாக பூமியில் வாழும் உயிரினங்களின் இயல்பு வாழ்வில் ஏற்றத்திற்கு மாற்றமான முறையில் அவை நிகழ்ந்து விடுகின்றன. இவ்வாறு எதிர்பாராத வகையில் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிர்கள், உடமைகள், உறவுகளை மனித சமுகம் இழக்க வேண்டிய ஆபத்தான நிலைமைகளுக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு நிகழும் அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்கள் பாதிக்கப்படாத மக்கள் அனைவரதும் தலையாய கடமையாகும். இதுவே மனிய நேயமுமான செயற்பாடுகளாகும். இவ்வாறு உதவுவதன் காரணமாகவே மனித சமுகம் மனித சமுகமாக வாழும் உன்னதமான விடயம் முன்னிலைப் படுத்தப்படுகின்றது எனலாம்.

மனிதன் மனித சமுகமாக வாழும்போதே அதன் மகிமையும், கௌரவமும் எல்லோரிடத்திலும் பிரதிபலித்து அமைதியும், சமாதானமும் ஏற்பட்டு ஒற்றுமையாக வாழ முடியும். ஆனால் இந்த நல்ல சிறப்பம்சங்களை கொச்சைப்படுத்தி அதன் மகிமைகளையும், கௌரவங்களையும் இல்லாதொழிப்பதற்கு ஒருசில தீய இனவாத சக்திகள் சமுகத்தில் இருப்பதானது ஏனையவர்களுக்கு பாரியதொரு அச்சுறுத்தலாகவும், ஆபத்தான விடயங்களாகவும் இருக்கின்றமை சமாதான விரும்பிகள் இடத்தில் கவலையைத் தோற்று வித்துள்ளது.

சமயத்தினைப் பாதுகாக்கின்றோம், நாட்டைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் நாட்டில் சமுகங்களுக்கிடையில் அமைதியின்மைகளை ஏற்படுத்தி வரும் இனவாதக் தீய கும்பல்கள் குறிப்பாக கலகொட அத்த ஞானசாரர் தலைமையிலான பொதுபல சேனா, இராவண பலய, சிங்கள ராவய போன்றவையும், கம்மன்வில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களும் மக்கள் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிப்பதாக கூறிக் கொண்டு தமது அரசியல் சுய இலாபங்களுக்காக கபட நாடகமாடி சமுகத்தினை சீரழித்து வரும் மேற்படி குழுவினரின் மக்கள் நலன் சேவைகள் தற்போது மக்கள் மத்தியில் அவர்கள் யார்? என்பதும், அவர்களின் சுயரூபம் என்ன? என்பதும் இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக நாடு பூராகவும் ஏற்பட்டிருந்த சீரற்ற கால நிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் பல இலட்சக் கணக்கான மக்கள் சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து பாடசாலைகள், மத ஸ்தளங்கள், பொது மண்டபங்கள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து இன்று வரை தமது சொந்த வீடுகளில் வசிக்க முடியாத அவல நிலையில் உணவுக்காகவும், உடுத்தும் உடைகளுக்காகவும் ஏங்கித் தவிக்கின்ற நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவலப்படும் மக்களின் நலன்களில் உண்மையான அன்பும், பாசமும் இருந்திருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டிய நிலையில் அம்மக்களைப் பாதுகாக்க முன் வந்திருக்க வேண்டும். வெள்ள அனர்த்தத்தினை உலகறிந்த சம்பவங்களாக இருக்கையில் ஒன்றுமே நடக்க வில்லை என்ற போர்வையில் இனவாதக் குழுக்கள் கபடித் தனமாக இருப்பதையும் இன்று கண்டு கொள்ள முடிகின்றது.

பாதிக்கப்பட்ட தமது சமுகத்திற்குக் கூட குரல் கொடுக்க வக்கில்லாத வங்குறோத்து கலாச்சாரத்தினைக் கொண்ட தீய இனவாத சக்திகள் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? என்பதனை தீர்மாணிக்கும் நல்லதொரு சந்தர்ப்பத்தினையும், அதற்கான உறுதிப்பாட்டை எடுப்பதற்கும் தற்போதைய வெள்ள அனர்த்தம் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

இடர்களும், துன்பங்களும் ஏற்படும்போது அதற்கு உதவுவதையே அனைத்துச் சமயங்களும் எடுத்தியம்புகின்றன. அதுவே மனித செயற்பாடுகளும் கூட ஆனால் பௌத்த சமயத்தினை கற்றுவிட்டு காவி உடைகளையும் அணிந்து கொண்டு மக்களையும், சமயத்தினையும் ஏமாற்றும் கலாச்சாரம் கொண்டவர்களை இனியாவது சமுகத்திலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட சகல சமுகத்தினதும் கோரிக்கைகளாகும்.
இனவாதிகள் அமைதியான சூழலில் தத்தமது இனவாதக் கூடுகளில் இருந்து வெளியே வந்து சிறுபான்மைச் சமுகங்கள் மத்தியியல் அவர்களுக்கு எதிராக அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்து கபடித்தனம் காட்டி வரும் கடும்போக்குவாத கும்பல்களின் கண்களுக்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களைக் கண்டு கொள்ளாதிருப்பதானது அவர்களின் கபடித் தனங்களின் உச்சக் கட்டத்தையல்லவா வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு சமுகத்தினை நல்ல வழயில் வழி நடத்த வேண்டியவர்கள் என்ற விடயத்தில் முதன்மையானவர்கள் மதப் போதகர்கள். இவர்கள் சமுகத்தின் நலன்களிலும், இறைவனுடனான தொடர்பினை மக்கள் சிறந்த முறையில் ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஒரு பாலமானவர்களாக இருக்க வேண்டியவர்களாகும்.

இயர்க்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு அவதிப்படும் மக்களைக் கண்டு உதவி செய்ய முன்வராத நாதியில்லாத நிலையில் இருக்கும் இனவாதிகள் அனர்த்தத்தில் தத்தளிக்கும் தமது சமுகத்தினையே கண்டு கொள்ளாத நிலை அவர்களின் இழிவு நிலைமைகளையே காட்டி நிற்கின்ற விடயத்தையே தற்போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் மீது பொதுபல சேனா மேற்கொண்ட மனித நேயமற்ற செயற்பாடுகள் எல்லாம் இன்று வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாக இருக்கின்றன. குறிப்பாக தெற்கில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைக் கலாச்சாரம், அவர்களின் உடமைகளை சூறையாடியமை, சேதமாக்கியமை போன்ற விடயங்களை எல்லாம் இலங்கை வாழ் மக்கள் யாரும் இலகுவில் மறந்து விடமுடியாது என்பதே உண்மையாகும்.

இவ்வாறான மனித நேயமற்றவர்களிடத்தில் இருந்து சகல மக்களையும் பாதுகாக்க வேண்டிய காலமே தற்போது கணிந்துள்ளது. இனவாதிகள் யாhர்? அவர்களின் பொய் முகங்கள் என்ன? என்பதனை அம்பலப் படுத்த வேண்டியுள்ளது. நாட்டையும், நாட்டு மக்களையும் குழப்பும் குழப்பவாதிகள் தற்போதைய அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் செத்தாலென்ன, பொலச்சால் என்ன என்று இருக்கும் விடயத்தில் தகுந்த பாடம் புகட்ட வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்தி தீய சக்திகளை ஒழிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் இனவாதத்தை ஒழிக்க நல்லதொரு சகுனமாகவே அமைந்துள்ளது. காரணம் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து அவர்களின் தராதரம் பார்க்காது சமுக நிறுவனங்களும், பள்ளிவாபசல்களும், விஹாரைகளும் செயற்பட்ட விதங்கள் இன ஒற்றுமையை வழியுறுத்தும் சிறந்த செயற்பாடுகளாகவே அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையையும், சமாதனத்தையும் விரும்புவதை வழியுறுத்துவதுடன் எமக்குல் சாதி, மத பேதங்கள் வேண்டாம் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற உயரிய பண்பினை வெளிப்படுத்தியிருப்பதனையே காட்டி நிற்பதாக சமுக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனர்த்தங்களின் போதல்லாமல் எல்லாக் காலங்களிலும் சமுக ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்பதே இனிவரும் காலங்களில் இலங்கை மக்களுக்குத் தேவையான விடயங்களாகும், கடந்த பல தஸாப்தங்களாக இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற கூ10ழ் நிலைகளுக்கு இனவாதமே பிரதான காரணமாக இருந்துள்ளது என்பதனை நாம் அனுபவ ரீதியாக கண்டு கொண்டோம்.

இனியும் இந்த நாட்டில் இனவாத சக்திகளுக்கு இடங்கொடுக்காது அவர்களின் சகல தீய நடவடிக்கைகளையும் முடக்கி அவர்களை சமுகத்திலிருந்து ஓரங்கட்டும்போது எதிர் காலத்தில் இலங்கையில் இன ஒற்றுமை என்பது மேலும் வழுப்பெற்று சிறந்ததொரு சமுதாயத்தினை இந்த நாட்டில் கட்டியெழுப்பலாம்.

எனவே அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழுவதற்கான சூழலை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டிய விடயமே இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த வகையில் அனைவரதும் ஒத்துழைப்பு என்பது இன்றியமையாதாகும்.

By

Related Post