அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பெளிசியிடம் கிழக்கில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை செய்யுமாறு-அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் சூறாவளியால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
ஏ.எச்.எம்.பௌசியிடத்தில் வேண்டியுள்ளார்.
இன்று காலை முதல் கிழக்கில் காணப்படும் சீரற்ற கால நிலையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் தங்களது அமைச்சின் கீழ் பாதிப்புக்குள்ளான மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து போதுமான உதவிகளை அவசரமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்.
சேத விபரங்களை கிராம அதிகாரிகள மூலம் பிரதேச செயலாளர்கள் கேறியுள்ளதாகவும் தெரியவருவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதேச,மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு உடடினாயக தாமதமின்றி பாதிக்கப்பட்ட மக்களின் நலன் குறித்து உரிய கவனம் எடுப்பதற்கான அறிவறுத்தல்களை வழங்கு மாறும் அமைச்சர் றிசாத் அமைச்சர் பவுசியிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே வேளை இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச.எம்.பவுசி தெரிவித்தார்.