Breaking
Tue. Mar 18th, 2025

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேசபைக்கு சார்பாக இடம் பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டுகாணாமற்போனோர் விவகாரம் தொடர்பாக நடந்த சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளன.இதில் கலந்துகொண்டகாணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, தனது கணவரை தேடித்தறுமாரு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைகள்ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர்.

Related Post