Breaking
Fri. Nov 15th, 2024

ஜனா­தி­பதி மாளி­கையில் நிலத்­துக்கு அடியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சொகுசு மாளி­கை­யா­னது, இர­க­சி­ய­மாக அமைக்­கப்­பட்ட மாளி­கை­யல்ல. மாறாக ஜனா­தி­பதி ஒரு­வரின் பாது­காப்பு கருதி பாது­காப்பு சபை, இராணுவ தள­பதி உள்­ளிட்­டோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அமைக்­கப்­பட்ட வதி­விடம் மட்­டுமே என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

2009 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரேயே இந்த நிலக்கீழ் பாது­காப்பு வதி­விடம் அமைக்­கப்­பட்­ட­து.அப்­போ­தி­ருந்த சூழலில் ஜனா­தி­பதி ஒரு­வரின் பாது­காப்புக் கரு­தியே அது நிர்மாணிக்கப்பட்டது.

எவ­ரி­னதும் தனிப்­பட்ட தேவைக்­காக அது அமைக்­கப்­ப­ட­வில்லை என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும் எனவும் கோத்­தா­பய குறிப்பிட்டுள்ளார். ஜனா­தி­பதி மாளி­கையில் நிலத்­துக்கு கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள ஆடம்­பர மாளிகை தொடர்பில் ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யி­டப்­பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே கோத்­த­பாய ராஜ­பக்ஷ இதனைத் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் தொலை­பேசி ஊடாக விளக்­க­ம­ளித்­துள்ள கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்­ள­தா­வது,

உண்­மையில் இது இர­க­சி­ய­மாக அமைக்­கப்­பட்ட பதுங்குக் குழியோ அல்­லது மாளி­கையோ கிடை­யாது. அப்­போ­தி­ருந்த சூழலில் ஜனா­தி­ப­தியின் பாது­காப்பை உறுதிச் செய்யும் பொறுப்பு எமக்­கி­ருந்­தது. அதன்­படி பாது­காப்பு சபையும், இரா­ணுவ தள­ப­தி­களும் எம்­மிடம் முன் வைத்த பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வா­கவே ஜனா­தி­பதி மாளி­கையில் நிலத்­துக்கு கீழ் ஒரு பாது­காப்­பன வதி­வி­டத்தை அமைத்தோம். இது ஒன்றும் இர­க­சி­ய­மாக அமைக்­கப்­பட்­டது கிடை­யாது.

அப்­போ­தி­ருந்த சூழலை மையப்­ப­டுத்­தியே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­போது வேண்­டு­மானால் இந்த வதி­விடம் தேவை­யற்­ற­தாக கருத முடியும். எனினும் அப்­போது புலி­க­ளுக்கு வான் வழி­யாக வந்து தாக்கும் திறன் இருந்த போதே இந்த நிலக் கீழ் வதி­விடம் தயார் செய்­யப்­பட்­டது.

புலிகள் முதன் முத­லாக ஆகாய மார்க்­க­மாக கொழும்­புக்கு வந்து குண்டு வீச்சை நடத்­திய போது அவர்­க­ளது இலக்கு ஜனா­தி­பதி மாளி­கை­யா­கவே இருந்­தது. எனினும் இடையில் அவர்கள் அதனை மாற்றி களனி திஸ்ஸ மின்­சார நிலை­யத்தின் மீது குண்டு வீசி­விட்டுச் சென்­றி­ருந்­தனர்.

இந் நிலையில் யுத்தம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருத்த காலப்­ப­கு­தி­யி­லேயே அந்த நிலக் கீழ் வதி­விடம் அமைக்­கப்­பட்­டது. யாரு­டைய தனிப்­பட்ட தேவைக்­கா­கவும் அது அமைக்­கப்­ப­ட­வில்லை. யாரேனும் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிப்­ப­வரின் பாது­காப்­புக்­கா­கவே அமைக்­கப்­பட்­டது. ஏனெனில் அப்­போது ஜனா­தி­பதி ஒரு­வரை பாது­காப்­பது மிக்க பொறுப்பு வாய்ந்த விட­ய­மாக இருந்­தது. இந் நிலையில் இந்த விட­யத்தை இப்­படி மிகப் பிரசித்தமாக கலந்துரையாடுவது தவறானது.

உண்மையில் புலிகளின் விமானம் வரும் போது ஜனாதிபதியை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாக எம்மால் ஓட முடியாது. அதனாலேயே எமது பாதுகாப்பு சேவைக்கு இப்படியான ஒரு நிலக் கீழ் வதிவிடம் தேவைப்பட்டது. அதனால் நாமே அந்த வதிவிடத்தை அமைத்தோம். என்றார்.

By

Related Post