Breaking
Sun. Mar 16th, 2025

இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார்.

குறித்த பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், முதலில் தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக பொலிஸார் மற்றும் முப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.

குறித்த பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் பணியானது இரவு 8 மணியளவில் நிறுத்தப்பட்டு, மீண்டும் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

கொஸ்கம மற்றும் அதனை சூழ உள்ள பகுதியில் தேடுதலை முன்னெடுத்துள்ளதுடன், இதுவரை கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக STF இல் விசேட தேர்ச்சி பெற்ற 10 குழுக்கள் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் STF இல் உள்ள 100 பேர் பாதுகாப்பிற்காக கொஸ்கம பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

By

Related Post