Breaking
Tue. Mar 18th, 2025

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வருக்கும்  அதிக தண்டனை  வழங்கக் கோரி இன்று ஏறாவூரில் கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நால்வருக்கும் அதிக தண்டனை வழங்கக்கோரி ஏறாவூரில் கடையடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பதற்றமான நிலை அங்கு நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

By

Related Post