கேள்வி எழுப்புகின்றார் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஜாஹிர்!
இரட்டைப் பிரஜாவுரிமைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் ஒற்றைப் பதிவு மறுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றி, அதனை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், தமது வேண்டுகோள் குறித்து சாதமான பதிலை வழங்காத மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடு தொடர்பில் தமது கவலையினை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (04) மாவட்ட செயலக கட்டிடத்தில், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையிலும், மன்னார் மாவட்டஅரசாங்க அதிபர் திருமதி. ஸ்டேன்லி டி மெல்லின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.
இதன்போது, பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், எமது இந்த மாவட்டத்தின் தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகளின் சில செயற்பாடுகள் தொடர்பில், சபையின் கவனத்தினை செலுத்துமாறு வேண்டுகோள் ஒன்றினை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது –
தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள் இரவு வேளைகளில் திடீரென சில வீடுகளுக்குள் சென்று வாக்காளர்கள் இருக்கின்றார்களா என்று தேடிப்பார்கின்றனர். இவர்கள் அடுப்பங்கரை வரை சென்று, இந்த சோதனையினை செய்கின்றனர். அச்சம் நிறைந்த காலத்தில் நடத்தப்பட்டது போன்று இவர்கள் செயற்படுவது அநாகரிகமானதாகும்.
வடக்கில் இருந்து இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள்குடியேற முடியாதுள்ள நிலையில், அவர்கள் தற்போது இடம்பெயர்ந்து வாழும் அல்லது சொந்த மாவட்டத்தில் கூட வாக்காளர்களாக பதிவு செய்ய முடியாதுள்ளனர். இந்த நாட்டின் சட்டத்தின் படி அவர்கள் இந்த நாட்டு பிரஜைகள் அவர்கள் வாழும் அல்லது வாழ விரம்பம் மாவட்டத்தின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்வது அவர்களது உரிமையாகும்.
இன்று அது மீறப்பட்டுள்ளது என்பதுடன் அதிகாரிகளினால் செயற்பாடு கட்டுக்கடங்காமல் போயுள்ளது.இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானமொன்றை நிறைவேற்றி தேர்தல் ஆணையாளகத்துக்கு அனுப்பு பொருத்தமானது என்ற வேண்டுகோளினை முன் வைத்த போது,இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பதிலானது இந்த மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்றும் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இரட்பை் பிரஜைக்கு இந்த நாட்டில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த நாட்டு பிரஜைக்கு தமது நாட்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுவருகின்றது.இது எந்த வித்தில் நியாயமானதாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகக் குறைந்தது மாவட்டத்தின் விடயங்களை பேசுகின்ற மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக கூறும் ஒருங்கிணைப்புக் குழுவானது இந்த பிரச்சினையினை அர்த்தமுள்ளதாக கவனத்தில் கொள்ளாமையானது மக்கள் இல்லாத பிரதேசத்தில் அபிவிருத்தி செய்வோம் என்று கூறுவதில் என்ன நீதி உள்ளது என கேட்கிரும்புகின்றேன்.
எமது இடம் பெயர்வுக்குள்ளான மக்கள் தமது வாக்குகளை ஏதாவது ணஒரு இடத்தில் பதிவு செய்து தாருங்கள் என்று கேட்பது அதற்கு பொருத்தமான பதிலை வழங்குவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பல்லவா என்றும் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்துள்ளார்.