படத்தில் இருப்பவர் தனது .இரு கண்களின் பார்வையையும் முழுமையாக .இழந்தவர்
ஆயினும் அதை காரணமாக வைத்து சோம்பேறியாகி முடங்கி விடாமல் தனது அயராத தொடர் முயர்ச்சியினால் திருமறை குர்ஆனின் 30 பகுதிகளையும் திறம்பட மனனம் செய்துள்ள ஹாபிழாக தன்னை மாற்றி சாதனை படைத்துள்ளார்
புற வெளிச்சம் இல்லை என்றாலும் அருள்மறை அல்குர்ஆன் என்னும் பேரொளியை தமது உள்ளத்தில் ஏற்றி வைத்த இறைவனுக்கு தாம் நன்றி சொல்வதாகவும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் ஆற்றலையும் திறனையும் தமக்கு வழங்கி தம்மீது அருள் செய்த இறைவனை தாம் என்றென்றும் புகழ்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்
கண்களின் பார்வை என்பதும் இறைவனின் மிகபெரும் அருளில் ஒன்றாகும் அந்த அருளை இழந்த நிலையில் உள்ள இந்த மனிதர் இறைவன் தம்மீது செய்துள்ள அருளுக்கு தம்மால் நன்றி சொல்ல இயலவில்லை என்று கூறும் போது இரு கண்களையும் அந்த கண்களில் தெளிவான் பார்வையையும் பெற்றிருப்போரே சிந்திப்பீர் இறைவனுக்கு நன்றி செலுத்த குடியவர்களாக தங்களை மாற்றி கொள்வீர்.