நாடளாவிய ரீதியில் எந்த பொலிஸ் பிரிவில் வசிப்பவரும் தொழில் நிமித்தம் வெளி நாடுசெல்லும் நோக்கில் பொலிஸ் அறிக்கைகளுக்கு வாரக்கணக்கில் செலவிடவேண்டிய அவசியம் இல்லை எனவும் அவற்றை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெளிநாடொன்றுக்கு தொழிலுக்கு செல்லும்போது பொலிஸ் அறிக்கை கோரப்படும் அப்போது யாழில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வந்து கைவிரல் ரேகைகளை பதிவு செய்து அதனை பெற்றுக் கொள்ள பல நாட்களை செலவிட வேண்டி ஏற்பட்டது. எனினும் தற்போது தொழில் நுட்பம் பரவல் படுத்தப்படுவதால் எந்த ஒரு பொலிஸ் பிரிவிலும் கைவிரல் ரேகை பதிவு குறித்த அறிக்கையை 3 நிமிடங்களில் பெறலாம். அதனால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் தத்தமது பொலிஸ் பிரிவிலேயே பொலிஸ் அறிக்கைகளைப் பெறக் கூடியதாக இருக்கும் என்றார்.