Breaking
Wed. Dec 25th, 2024

பரீட்சை மண்டபத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற இரண்டு மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை கண்காணிப்புகளுக்காக 24 மணித்தியாலமும் அதிகாரிகள் குழு சகல பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் விஜயம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுவினரே இந்த கையடக்க தொலைபேசி விடயத்தை கண்டு பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Post