Breaking
Sun. Dec 22nd, 2024

‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று சிலர், சிதறு தேங்காய் உடைக்கின்றனர். நேர்மையானவர்களே சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். மாறாக இரத்தக்கறை படிந்தவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எதுவும் நடந்துவிடுவதில்லை’ என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாவலப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமானவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவை சிறையில் தள்ளியவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எந்தவித பயனையும் பெற்றுகொள்ள போவதில்லை. மாறாக சாபத்தையே பெற்றுகொள்கின்றனர்.

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் எமது நாடு சீர்குலைந்தது. பலர் கொல்லப்பட்டனர். மீண்டும் அவ்வாறானதொரு யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளையே ஜனாதிபதியும் பிரதமரும் முன்னெடுத்து வருகின்றனர்’ என அவர் மேலும் கூறினார்.

By

Related Post