Breaking
Sat. Dec 28th, 2024

குறைந்தளவிலான மின் கட்டண முறைமை இரவு 9.30க்குப் பின்னர் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

மாலை 6 மணிமுதல், இரவு 09 மணிவரை காணப்படும் மின்சாரத்திற்கான மேலதிக கேள்வியை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமென அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் படகொட கூறினார்.

இதற்கமைய, இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரையான காலப்பகுதியில் விசேட கட்டணத்திற்கு அமைவாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சாரத்திற்கான தேவை காலை 6 மணிமுதல், இரவு 09 மணிவரை அதிகமாக உள்ளதால், கட்டணமும் அதிகம் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Post