திருகோணமலை காலனித்துவம் மற்றும் அண்மைய இராணுவத்தின் வரலாறு தொடர்பான அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டள்ளது.
இலங்கை இராணுவம் திறந்தவெளி அருங்காட்சியகம் ஒன்றை திருகோணமலை உவர் மலை பகுதியில் அமைத்துள்ளது. நேற்று முன்தினம் (19) 22ம் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனை திறந்து வைத்தார்.
இன்று முதல் பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும். காலாற்படை ஆயுதங்கள்,கவச வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆடியோ காட்சி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் கிடைக்கும் நிதி போர் வீரர்களின் குடும்பத்தின் சமூக நலப்பணிகளுக்கு பயன்படவுள்ளது.