Breaking
Tue. Dec 24th, 2024
இராவண மன்னன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இது தொடர்பில் புத்திக்க பத்திரண யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இராவண மன்னன் தொடர்பில் திடமான வரலாற்றுத் தகவல்கள் இல்லாத போதிலும், கிரமமான ஆய்வின் மூலம் இராவண மன்னன் தொடர்பிலான மக்களின் எண்ணக்கருக்களை மேம்படுத்த முடியும்.

இராவண மன்னனிடம் காணப்பட்ட அறிவினை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இலங்கை வரலாற்றில் மறைந்து போன உண்மைகளை இந்த ஆய்வின் மூலம் வெளிக்கொணர முடியும்.

நிபுணர்கள் குழுவொன்றின் ஊடாக இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என புத்திக்க பத்திரண நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள தனிப்பட்ட உறுப்பினர் யோசனையில் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post