Breaking
Fri. Jan 10th, 2025

சார்க் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகும். இந்நிலையில் இலங்கை- பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையில் உள்ள இராஜதந்திர உறவுகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது. .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோக பூர்வ சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பித்தார். அவருடன் சென்றவர் என்றவகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இப்பயணம் குறித்து கொழும்பில் வைத்து கருத்து வெளியிடுகையில் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
இலங்கை பாகிஸ்தானுக்கிடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் உடன்படிக்கையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான எமது வருடாந்த மொத்த வர்த்தகம் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இலங்கை- பாகிஸ்தானுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (PSFTA) 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 2005 ஆம் ஆண்டில் 158 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2013 ஆம் ஆண்டு; இறுதியில் 462 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் புள்ளிவிபரங்களில் பதிவாகியுள்ளன. சார்க் வலயத்தில் பாகிஸ்தானும் இந்தியாவைப் பின்பற்றி இலங்கையின் உற்பத்திகளுக்கான 2வது பெரிய கொள்வனவுச் சந்தையாக மாறியுள்ளது.
கணக்கெடுப்புக்களின் படி இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10% பிராந்திய வலய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. பாகிஸ்தானுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 2013ம் ஆண்டளவில் 83.05 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்திருந்தது. இவ்வர்த்தகச் செயன்முறைக்கான பொறிமுறை பாகிஸ்தான் -இலங்கை கூட்டு வர்த்தக ஆணைக்குழுவாகும். இது 1974ல் தாபிக்கப்பட்டதுடன், இதன் 11வது செயலமர்வு 2013 நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் தற்போது, இலங்கையுடன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.
460 அமெரிக்க டொலர்கள் பெறுமதிக்கும் மேலாகவும் வர்த்தகம் செய்யக்கூடிய சாதகமான நிலை எமது இரு நாட்டுக்கும் உண்டு. இத்தருணத்தில்; எங்களது அடுத்த இலக்காக ஒரு பில்லியன அமெரிக்க டொலர் அளவில் வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம். பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள அழைத்த முதல் நாடு இலங்கையே ஆகும். இது இலங்கையின் பிராந்திய கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இலங்கை பாகிஸ்தானுக்கு முன்னுரிமை அளித்து வருவதனை வெளிக்காட்டுவதாய் உள்ளது’ என கடந்த ஜனவரி 27ம் திகதி இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரேஷி கொழும்பில் வைத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்திருந்தாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனவரி 27ம் திகதி இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரேஷி கொழும்பில் வைத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பு ஒன்றின் போது
ஜனவரி 27ம் திகதி இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரேஷி கொழும்பில் வைத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பு ஒன்றின் போது

Related Post