Breaking
Mon. Dec 23rd, 2024
இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழிதான், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார்.
 
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி, நேற்று (04) மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து, ஓட்டமாவடி நகரை அடைந்த நிலையில், அதில் பங்கேற்று, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
 
“தமிழ் பேசும் மக்களுக்கான நீதி கோரிய பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இந்தப் பயணம் எதிர்காலத்தில் ஒற்றுமைப்பட்ட பயணமாக இருக்க வேண்டும். இந்தப் பயணத்தில் தமிழ்த் தலைவர்கள் மீது முஸ்லிம் தலைவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டிய காலகட்டம் வந்துள்ளது என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
 
இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் இந்த நிகழ்ச்சி நிரல். எதிர்காலத்தில் சிறுபான்மைச் சமூகம் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று வேறுபடுத்தும் ஆட்சியாளர்களுக்கு துல்லியமாக பதில் சொல்ல வேண்டியுள்ளது.
 
இந்த நிலவரத்தை ஏற்படுத்தியவர்களும் அவர்கள் தான். அருவருப்பாக இந்த வீதியில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியவர்களும் ஆட்சியாளர்களே! அவர்கள் நினைப்பதுதான் சட்டம். நினைப்பவர்களைப் பிடிப்பார்கள், விடுதலை செய்வார்கள். அந்த அளவிற்கு சட்டம் மௌனிதுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.
 

Related Post