Breaking
Sun. Dec 22nd, 2024
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார் இருவர் மீது அசிட்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வீரகெடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பிடியாணையுடன் சந்தேக நபரைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற வேளை, சந்தேக நபர் தனது மகனுடன் இணைந்து குறித்த இருவர் மீதும் அவர் தாக்க முற்பட்டுள்ளார். அதனைத் தடுக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் முற்பட்ட வேளை, அங்கு வந்த சந்தேகநபரின் மனைவி அவர்கள் மீது அசீட்டை வீசியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும்  வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,சந்தேகநபர், அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By

Related Post