Breaking
Mon. Nov 25th, 2024

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர், அண்ணல் நகர், மஹ்ரூப் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள  காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் இரு கிழமைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக உடனான சந்திப்பின் போது, காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு உடன் நடவடிக்கைகளை துரிதமாக ஏற்பாடு செய்யுமாறு காணி மறுசீரமைப்பு ஆணையாளருக்கும், பிராந்திய உதவி ஆணையாளருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில்  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னரே, இவ்வாறு தெரிவித்தார்.

கிண்ணியா பைசல் நகர், மஹ்ரூப் நகர், அண்ணல் நகர் பகுதிகளில் காணி உரிமம் இல்லாதவர்களுக்கான காணி கச்சேரி அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்க முடியாமையிட்டு இது தொடர்பில், அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்தே, இவ்வாறாக இரு வாரங்களுக்குள் உரியவர்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

(ன)

Related Post