இலங்கையின் 200 வீடுகளை சூரிய மின்வலுவில் இயங்கும் குடியிருப்புக்களாக மாற்றும் தேசிய திட்டம் இரு வாரங்களுக்குள் அமுலாக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இந்தத் திட்டம் சூரிய மின்வலு நிலைமாற்ற திட்டம் என்று அழைக்கப்படவுள்ளது. இதன் கீழ் மூன்று முறைகளின் கீழ் பல்வேறு பொருளாதார மட்டங்களைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களுக்கு ஏற்ற வகையில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு குடும்பங்களும், தத்தமது வீடுகளில் சூரிய மின்வலு தொகுதிகளை பொருத்தி தேவையான மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்குமென அமைச்சர் இங்கு தெரிவித்தார். மிகையான மின்வலுவை காசுக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டக்கூடியதாக இருக்கும். சூரிய மின்வலு தொகுதியை விலை கொடுத்து வாங்க கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.