-ஊடகப்பிரிவு-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக, நேற்று (13) இறக்காமத்தில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது,
மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களின் அனைத்து விதமான தேவைகளையும் வேண்டுகோள்களையும் மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றித் தரும்.
கிழக்கு மாகாணத்திலே நாங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தவகையில், உண்ண உணவின்றி, வசிப்பதற்கு வீடு வாசல் அற்ற நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான எந்தவொரு வசதிகளையும் கிழக்கை ஆட்சி செய்த அரசியல் வாதிகள் இற்றைவரை செய்யவில்லை. கடுமையான கஷ்டங்களோடு இந்த மக்கள் காலத்தை கழிக்கின்றனர்.
சில குடும்பங்கள் பெண்களைத் தலைமையாகக் கொன்டிருக்கின்றன. இங்கு பெண்களே உழைத்து தங்கள் பிள்ளைகளை பார்த்துக்கொள்கின்றனர். சில குடும்பங்கள் அடிப்படை வசதிகள் கூட அற்ற வீடுகளில் வசிக்கின்றனர். படித்த பெண்களுக்கான தொழில் வாய்ப்பு இல்லை. இப்படியான பிரச்சினைகளினால்தான் இளம்பெண்கள் வெளிநாடு செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இவை அணைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி, இவ்வளவு காலமும் எம்மை ஏமாற்றிய கட்சிகளை தூக்கி வீசிவிட்டு மயில் சின்னத்துக்கு வாக்களித்து, மக்கள் காங்கிரஸுக்கு இந்தப் பிரதேச சபையை ஆட்சி செய்ய சந்தர்ப்பத்தை வழங்குங்கள்..
பெண்கள் தலமை வகிக்கும் குடும்பங்களுக்கான சரியான வாழ்வாதார வசதிகள். தொழில் வாய்ப்பு, தொழிற் பயிற்சி நிலையம் போன்ற இன்னும் பல அபிவிருத்திகளையும், பிரதேச சபை ஊடாக எமது கட்சி முன்னெடுக்கும் என அவர் கூறினார்.