Breaking
Fri. Nov 15th, 2024

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் ‘செல்பி’ (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் ‘செல்பி’ எடுக்கப்படுகிறது.

இன்றைக்கு ‘செல்பி’ ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு ‘டிஜிடல் புற்று நோய்’ போல விரைந்து பரவுகிறது.

ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும் தனது செல்பிகளுக்குக் கிடைக்கும் ‘லைக்’குகளும், பார்வைகளும் இளசுகளை செல்பி எனும் புதை குழிக்குள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் வைத்து இறந்து போன தாத்தாவின் படுக்கையில் இருந்து தனது மொபைல் போனில் செல்பி எடுத்து வெளியிட்ட பேரன் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது இறந்தபோன தாத்தாவுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ள பேரன் அதற்கு தலைப்பாக “பிரியா விடை” தாத்தா (Good Bye, Grandfather) என குறிபிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் சமூக இணையதளத்தில் விமர்சன அலையை ஏற்படுத்தி உள்ளது இது போன்ற ஒழுக்க கேடான புகைபடத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சிலர் கோபமாக இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளனர்.

இறந்த மனிதரின் கண்ணியத்தை மதிப்பது தோல்வி அடைந்தது உள்ளது . இது எந்த மருத்துவமனை என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என ஒரு பாலோவர் கூறி உள்ளார்.

மதினாவை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் இந்த புகைபடத்தை வைத்து எந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து எடுக்கபட்டது என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்என்று மதினா பகுதி தலைமை செய்தி தொடர்பாளர் அப்துல் ரசாக் ஹப்டா தெரிவித்து உள்ளார்.

மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் இளைஞரின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் பொது ஒழுக்க மீறலுகளுக்கா இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறைகேடான செயலை தடுக்க தவறிய அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்

சவ்ட் அல் ஹர்பி என்ற வழக்கறிஞர் கூறும் போது இந்த இளைன்ரின் செயல் தண்டனைக்குரிய குற்றமாகும் இது பொதுவான உணர்வுகளை ஒரு பயங்கரமான ஆத்திரமூட்டல் மற்றும் பொது ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறுவதாகும் உள்ளது.இந்த சமூகம் இத்கைய அணுகுமுறைகளை நிராகரிக்கிறது.என்று கூறினார்

அதிகமாக செல்பி எடுக்கும் மனநிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது  அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ. (APA).safe_image

Related Post