Breaking
Fri. Nov 15th, 2024

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பில் முழு­மை­யான விசா­ர­ணை நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

கடந்த காலங்­களில் பல நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைகள் இந்த சபையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. 1994 ஆம் ஆண்டு நானும் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் ஒரே சம­யத்­தி­லேயே பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்­தி­ருந்தோம். அதன் பின்னர் பல விட­யங்­களில் அவ­ருடன் இணைந்து பணி­யாற்­றி­யி­ருக்­கின்றேன். அவ்­வா­றி­ருக்­கையில் அர­சாங்­கங்­களில் காணப்­படும் பிர­தா­ன­மா­ன­வர்­களை இலக்கு வைத்தே நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வதை நாம் கண்டு வந்­தி­ருக்­கின்றோம். லக் ஷமன் கதிர்­காமர் போன்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வந்­தி­ருந்­தார்கள். ஆனால் அதனால் எத­னையும் சாதிக்­க­வில்லை. அதே­நேரம் அந்த நபர்­களும் தமது செயற்­பா­டு­களை நிறுத்­த­வு­மில்லை. தற்­போது நிதி அமைச்­ச­ருக்­கெ­தி­ராக பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. உண்­மை­யி­லேயே நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு எதி­ரா­கவே இப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் வீழ்ச்­சிக்கு கடந்­த­கால ஆட்­சி­யா­ளர்­களே கார­ண­மாக இருக்­கின்­றனர். நாட்டின் வரு­மா­னத்தில் பாரிய செல்­வாக்கைச் செலுத்தும் வரி பெறுகை முறை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த பத்து ஆண்­டு­க­ளாக நாட்டின் வரு­மா­னத்தை ஈட்டிக் கொடுக்கும் இறை­வரித் திணைக்­களம் முறை­யாக செயற்­ப­ட­வில்லை. அர­சியல் தலை­யீ­டுகள் காணப்­பட்­டன. மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. வரி அற­வீ­டு­களை முறை­யாக மேற்­கொள்­ளாது பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டார்கள். இவ்­வாறு வினைத்­திறன் அற்ற செயற்­பாட்டின் கார­ண­மா­கத்தான் பொரு­ளா­தார ரீதி­யான பாதிப்பு ஏற்­பட்­டது. இறை­வரித் திணைக்­க­ளத்தில் 4 பில்­லியன் ரூபா மோசடி இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்­றது. உண்­மை­யி­லேயே எனது தேடல்கள் ஆய்­வு­களின் பிர­காரம் இறை­வரித் திணைக்­க­ளத்தில் அதன் 6 மடங்­கி­லான தொகையே மோச­டி­யாக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இப்­பா­ரிய மோசடி தொடர்­பாக விசா­ர­ணை மேற்­கொள்­ளப்­பட்டு அனை­வரும் நீதியின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.

தற்­போது நாட்டின் வரி அற­வீடு ஓர­ளவு முறை­யாக இடம்­பெ­று­கின்­றது. பொரு­ளா­தார வீழ்ச்­சியின் கார­ண­மாக வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள போது பொது மக்­களின் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு வற்­வரி அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. இதன் மூல­மாக எதிர்­கா­லத்தில் முன்­னேற்­ற­க­ர­மான நிலை­மைகள் ஏற்­பட வாய்ப்­பு­ரு­வாகும்.

அதே­வேளை, கடந்த காலத்தில் வரி தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக் கப்பட்டது. இவ் ஆணைக்குழுவானது பரிந்துரைகளை வழங்கியுள்ளபோதும் தற்போது வரையில் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆகவே அவ் வறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என இச்சமயத் தில் கோருவதோடு எமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிக்கும் என்றார்.

By

Related Post