– ARM INAS –
வெள்ளத்தால் பாதிக்கப்பட்வர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளம் போல் திரண்டு வந்து உதவி செய்கிறார்கள் மனிதநேயர்கள்.
குறைந்தது இரண்டு மாதங்களுக்குள்ளாவது பாதிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுக் கொடுக்கப்படும் போல் தெரிகிறது.
இழப்புக்களுக்கான நஷ்டஈடுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகத்தான் உள்ளது. ஏதோ ஒரு வகையில் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்..
நாம் அனர்த்தத்தின் போது வாழ்ந்தது போன்ற ஒரு வாழ்க்கையைத்தான். நாம் நாட்டில் பெரும்பாலானோர் வருடம் 365 நாட்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆயுள்பூராகவும் அனர்தத்தில் வாழும் அந்த ஏழைகளின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க இறைவன் நமக்கு தந்த ஒரு வாய்ப்பாக இதனை கருதுவோம்.
வீண் போலி ஆடம்பரங்களை குறைத்து, நாடக சீரியல் போதையிலிருந்து மீண்டு நம்மை நாமே ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பகட்டு வாழ்க்கையிலிருந்து மீண்டு அடுத்தவன் கஷ்டத்தை உணர்ந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க முயற்சிப்போம்
இறுதியாக நான் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது என் அடுத்த வீட்டுக்காரன் குடும்பத்தோடு லட்சக்கணக்கு செலவழித்து மக்காவுக்கு ஆன்மீகப் பயணம் சென்றால் உங்களுக்கு எவ்வளவு வலிக்கும்? அது நியாயமானதா?
இலங்கையில் பலரும் வெள்ள அனர்தத்தை விட பயங்கரமானதொரு வாழ்க்கையை தினம்தினம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில் நாம் கோடிக்கணக்கில் செலவழித்து மக்காவுக்கு ஆன்மீகப் பயணம் சென்றால் அவர்களுக்கு வலிக்குமா இல்லையா?
அது நீதியா நியாயமா?
இதிலிந்து இப்படியொரு பாடத்தை வாழ்க்கை அனுபவத்தை நாம் படித்துக் கொண்டால் இது அல்லாஹ் எமக்கு அனுப்பிய அனர்த்தம் அல்ல. அது அல்லாஹ்வின் புறநத்திலிருந்து வந்த பேரருள் அப்படியில்லாமல் அனர்தத்திலிருந்து மீண்ட பின் மறுபடியும் முன்பிருந்தது போன்ற ராமன் ஆண்டால் என்ன? ராவணண் ஆண்டால் என்ன?
எவன் எங்கு போய் செத்தாலும், எனக்கு என்ன என்று நாங்கள் வாழ்ந்தால் நிச்சயம் இந்த வெள்ள அனர்த்தம் அல்லாஹ்வின் புறத்தால் எமக்கு வந்த தண்டனை தான்.
அது மட்மல்ல இந்த அனர்த்தம் நம் மத்தியில் எந்த நல்ல மாற்றத்தையும் கொண்டுவரவில்லையென்றால் நாம் இதனை விட பெரிய தண்டனையையும் அழிவையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கட்டாயம் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியிருக்கும்