Breaking
Tue. Jan 7th, 2025

மௌலவி செய்யது அலி ஃபைஜி

ஆப்ரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய படை தளத்தை கொண்டுள்ள நாடு ஜைபுட்டி

சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி அங்கு உள்ள ஒரு இறை இல்லத்திர்கு வருகை தந்தார்

அப்போது அங்கு மார்க்க உரை நடை பெற்று கொண்டிருந்தது
இஸ்லாம் கூறும் சகிப்பு தன்மை என்ற தலைப்பில் நிகழ்த்த பட்டு கொண்டிருந்த உரையை அந்த இறை இல்லத்தில் அமர்ந்து ஜான் கேரி செவியுற்றார்

பிறகு சோமாலியா மற்றும் ஏமன் பிரச்சனைகள் பற்றி அங்கிருந்தவர்களிடையே அமெரிக்கவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி உரை நிகழ்த்தினார்

ஜான் கேரியின் இந்த செயல் பரவலாக வலை தளங்களில் வாத பிரதி வாதங்களை வளர்த்திருக்கிறது

இதை ஆதரித்தும் எதிர்த்தும் வலை தளங்களில் கருத்துகள் பதிய பட்டு வருகிறது

உங்கள் கருத்துகளையும் நீங்கள் பதியலாம்

மனித மனங்களை புரட்டும் எங்கள் இறைவனே இவரது மனதையும் சத்தியத்தை நோக்கி புரட்டுவாயாக!

Related Post