Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்­கையில் 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். இவர்­களில் வடக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்­தர்­களும் அடங்­கு­கின்­றனர் என புத்­த­சா­சன அமைச்சு தெரி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல கேள்­விக்­கான விடை­ய­ளிக்கும் நேரத்­தின்­போது ஐ.தே.கட்சி.எம்.பி. புத்­திக பத்­தி­ரணவின் கேள்­விக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட பதி­லி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புத்­த­சா­சன அமைச்சின் பதிலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குடி­சன மதிப்­பீட்டுத் திணைக்­கத்­தினால் 2012 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர்.

மேற்­கூ­றப்­பட்ட கணக்­கெ­டுப்­பிற்கு அமைய வடக்கு மாகா­ணத்தில் வாழும் தமிழ் பெளத்­தர்­களின் எண்­ணிக்கை 470 ஆகும். அதே­வேளை இலங்­கையில் தமிழ் பிக்­கு­களும் உள்­ளனர். பெளத்த மத அலு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்­க­மைய தமிழ் பிக்­கு­களின் எண்­ணிக்கை 11 ஆகும்.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தமிழ் பெளத்­தர்­க­ளுக்கு சகல வச­தி­க­ளையும் அரசு செய்து கொடுத்­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் ஸ்ரீநந்­தர ராம எனும் பெயரில் தமிழ் மொழியில் கற்­பிக்கும் பெளத்த அற­நெறிப் பாட­சா­லை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்டு 2013.01.07 ஆம் திகதி பெளத்த மத அலு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இங்கு சுமார் 80 தமிழ் மக்கள் கல்வி பயில்­

கின்­றார்கள். எனினும் இயங்­கு­வ­தற்கு நிலை­யான இட­மொன்று இல்­லா­மை­யினால் தற்­போது இது செய­லி­ழந்து காணப்­ப­டு­கின்­றது. நிலையான இடமொன்று கண்டறியப்பட்டு மீண்டும் தமிழ் மொழியிலான பெளத்த அறநெறிப் பாடசாலை தொடர்ந்தும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

By

Related Post