Breaking
Mon. Dec 23rd, 2024

விண்­வெ­ளி­யி­லி­ருந்து மர்­ம­மான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்­க­ரைக்கு அப்பால் விழ­வுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

‘டபிள்யூ.ரி.1190.எப்’ என அழைக்­கப்­படும் மேற்­படி சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி பிர­பஞ்ச நேரப்­படி 6.20 மணிக்கு இலங்­கையின் தென் பிராந்­திய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 65 கிலோ­மீற்றர் தொலைவில் இந்து சமுத்­தி­ரத்தில் விழ­வுள்­ள­தாக ‘நேச்சர்’ ஆய்­வேடு அறிக்­கை­யிட்­டுள்­ளது.

இந்த 7 அடி நீள­மான சிதைவு அண்­மையில் சந்­தி­ர­னுக்கு விண்­க­லத்தை அனுப்பும் நட­வ­டிக்­கையில் பங்­கேற்ற ஏவு­க­ணையின் பாக­மா­கவோ அல்­லது . 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக விண்­வெ­ளி­யி­லி­ருந்த அப்­பலோ விண்­க­லத்தின் பாக­மா­கவோ இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

இந்தச் சிதைவு பூமி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம் என்­பதை விடவும் அது பூமியில் விழு­கையில் அதனால் ஏற்­படும் சிறி­ய­ள­வான விளைவு சம்­பந்­த­மாக அவ­தா­னிப்­ப­தற்கு விஞ்­ஞா­னி­க­ளுக்கு கிடைத்த அரிய வாய்ப்­பாக இது நோக்­கப்­ப­டு­கி­றது.

இந்தச் சிதைவு எமது பூமியின் வளி­மண்­ட­லத்­துக்குள் பிர­வே­சிக்­கையில் அதன் பெரு­ம­ள­வான பாகம் எரிந்து விட வாய்ப்­புள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

‘டபிள்யூ.ரி.1190.எப் ‘ சிதைவின் பாதை முதன்­மு­த­லாக 2012 ஆம் ஆண்டில் அள­வி­டப்­பட்­டது. இந்த இனங்­கண்­ட­றி­யப்­ப­டாத சிதைவு அமெ­ரிக்க அரி­ஸோனா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த கற்­ற­லினா வான் ஆராய்ச்சி நிலை­யத்தைச் சேர்ந்த விண்­வெளி ஆராய்ச்­சி­யார்­களால் இந்த மாத ஆரம்­பத்தில் மீள அவ­தா­னிக்­கப்­பட்­டது.

ஹவாய் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மயுனா கீயி­லுள்ள 7 அடி நீள­மான விண்­வெளி தொலை­நோக்­கி­யா­லேயே மேற்­படி சிதைவு அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள ஆய்­வு­கூ­டத்தில் அந்த சிதைவை இனங்­கண்­ட­றிந்த விண்­ணியல் மென்­பொருள் அபி­வி­ருத்­தி­யா­ள­ரான பில் கிறே விப­ரிக்­கையில், அந்த சிதைவு பூமிக்கும் சந்­தி­ர­னுக்­கு­மி­டை­யி­லான தூரத்தை விடவும் இரு மடங்கு தூரத்தில் பய­ணித்து கொண்­டி­ருப்­ப­தா­கவும் அந்த சிதை­வி­லுள்ள வெற்­றி­டத்தின் அடிப்­ப­டையில் அது நகர்ந்து வரு­வ­தாக நம்­பப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இவ்­வாறு எத்­தனை சிதை­வுகள் பூமி­யையும் சந்­தி­ர­னையும் வலம் வரு­கின்­றன என்­பது அறி­யப்­ப­ட­வில்லை என தெரி­வித்த அவர், ஆனால் ‘டபிள்யூ.ரி.1190 .எப்’ அரிய ஒன்­றா­க­வுள்­ளது என்று கூறினார்.

இது விண்வெளியில் வலம் வரும் மனிதனால் உருவாக்கப்பட்ட 20 பொருட்களில் ஒன்றென நம்பப்படுவதாக அமெரிக்க மஸாசுஸெட்ஸ் மாநிலத்தில் கேம்பிரிட்ஜ் பிராந்தியத்திலுள்ள மைனர் பிளனட் நிலையத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான காரெத் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

By

Related Post