Breaking
Mon. Nov 18th, 2024

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக துறைகளில் முன்னேற்றம் காணும் செயற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில் நுட்ப இணை ஆணைக்குழுவின் கூட்டம் துருக்கியின் அங்காராவில் சனிக்கிழமையில் இடம் பெற்ற போதே இந்த உடன்பாடு காணப்பட்டது.

இலங்கை குழுவிற்கு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் இந்த அமர்வில் கலந்து கொண்டதுடன், துருகிக்கியின் சார்பில் தேசிய கல்வி அமைச்சர் இல்மாஸ் இயாஸ் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் வர்த்தக துறையில் மற்றும் ஏனைய துறைகளில் காணப்பட்ட உடன்பாடுகள் மீள பரிசீலணைக்குட்டுத்தப்பட்டதுன், இதனை நடை முறைப்படுத்துவதற்கு தேவைாயன காலப்பகுதி என்பன பற்றி இதன்போது இரு தரப்பினராலும் உடன்பாடு காணப்பட்டதுடன், கூட்ட இணக்க அறிக்கையில் கைச்சாத்திடப்பட்டது.

அதே வேளை இந்த அமர்வில் கலந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கை அரசாகத்தின் தற்போதைய  பொருளாதார கொள்கை மற்றும் முதலீட்டார்களுக்கான வாய்ப்புக்கள் தொடர்பில் இதன் போது தேசிய கல்வி அமைச்சர் மற்றும் குழுவினருக்கு விளக்கியமை குறி்ப்பிடத்தக்கது.

இலங்கை குழுவில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் அமைச்சின் செயலாளர் தென்னகோன், இலங்கை துாதுவர் எம்.ஹம்சா, மொத்த கூட்டுறவு துறை திணைக்களத்தின் தலைவர் றிஸ்வான் ஹமீம் மற்றும் அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

t-3-jpg2_-3 t-4

By

Related Post