Breaking
Fri. Mar 14th, 2025

தமிழீழ ஆதரவாளர்களுக்கான டெசோ கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில்  இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில், இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்வதேச விசாரணை குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும், ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வை அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் க.அன்பழகன் மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்களும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவனும் மற்றும் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், சுப்புலெட்சுமி, ஜெகதீசன் உட்படப் பலர் பங்கேற்றனர்

இலங்கைக்கு எதிராக மேற்படி டெசோ அமைப்பு எதிர்வரும் 03ஆம் திகதி சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

Related Post