தற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
நிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை கூறியுள்ளார்.
மாறிவரும் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஒபாமா இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கனடாவின் பிரதமர் Justin Trudo,அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sherif ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராட் அல் ஹூசைனையும் மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.