Breaking
Sun. Sep 22nd, 2024

இலங்கையின் கல்வித்திட்டத்துக்குள், ஸ்மாட் வகுப்பறைகள், இலத்திரனியல் பாடநூல் மற்றும் இலத்திரனியல் கற்றல் போன்ற நவீன கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தென் கொரிய அரசாங்கம், இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கான வருடாந்த ஆசிரியர் பயிற்சி திட்டத்தை தொடர்ந்தும் நடத்தும் என்றும் உறுதியளித்துள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு தென்கொரியாவுக்குச் சென்றிருந்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், குவாங்ஜூ நகரிலுள்ள கல்வித்திணைக்களத்தின் கண்காணிப்பாளரை சந்தித்த போதே, இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு, தென்கொரியா உதவும்’  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் கல்வித்திட்டத்தை மென்மேலும் அபிவிருத்திய அடையச்செய்வதற்கு தென்கொரிய அரசாங்கம் தன்னுடைய முழு ஆதரவை எப்போதும் வழங்கும்’ என்று தென்கொரியாவின் துணை பிரதமரும் கல்வியமைச்சருமான லீ ஜூன் சிக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post