Breaking
Fri. Jan 10th, 2025

இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆறு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்திய அரசால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தக் குதிரைகள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் குதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஒருங்கமைப்புத் தலைவர் பிரகாஷ் கோபாலன் இலங்கை இராணுவத்தினரிடம் இன்று இந்த குதிரைகளைக் கையளித்தார்.
குதிரைகளை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றதுடன், இதன்போது குதிரைகள் பயிற்சியளிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களும், பிறப்புச் சான்றிதழ்களும் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Post