இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் ஓர் நிலையான நிதி நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு ஒருமித்த கருத்துணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த காலத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், நாணய நிதியம் தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.