Breaking
Sat. Mar 15th, 2025
இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு பாதுகாப்பு அதிகாரியாக புதியவர் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார்.

கேர்ணல் மொஹமட் இர்ஷாத் கான் என்பவரே இந்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இதன்போது இலங்கை இராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இடையில் புதிய முயற்சிகளை முன்கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டதாக இலங்கை இராணுவ இணைத்தளம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பாகிஸ்தானிய அரசாங்கம் ஆவலுடன் இருப்பதாக உயர்ஸ்தானிகரக புதிய பாதுகாப்பு அதிகாரி இதன் போது தெரிவித்துள்ளார்.

Related Post