இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் சமூத்திரக் கண்காணிப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் பிரதமர், இதற்குத் தேவையான திட்டங்களை இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.