இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். குறித்த தலைவர்கள் இலங்கைக்கு இந்த ஆண்டில் விஜயம் செய்வார்கள் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இந்த மூன்று தலைவர்களும் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளனர்.
ஜப்பானிய பிரதமர் ஜின்சோ அபே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இவ்வாண்டில் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டில் தாய்லாந்து பிரதமர் யின்லக் சின்வத்ரா நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார் இதன் பின்னர் உலகத் தலைவர்கள் எவரும் நாடாளுமன்றில் உரையாற்றவில்லை.