தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சுமார் 100 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெரியப்படுத்தியுள்ள போதிலும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனைய நாட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், சம்பள உயர்வு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் தமக்கு செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துபாயிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் முகவர் நிலையங்களிடம் கோரிய போதிலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு இன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.