கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்த 10 அம்சக்கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 13வது அரசியலமைப்பு ரத்துச்செய்யப்படவேண்டு;ம் என்ற யோசனையும் உள்ளடங்குகிறது. எனினும், தேசிய சுதந்திரமுன்னணியின் அனைத்து யோசனைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்லமுடியும் என்று முஸம்மில் கூறினார். இலங்கையின் அரசியலமைப்புக்கு 36 வயது. அதனை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. எனவே, பழைய அரசியலமைப்பு ரத்துச்செய்யப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும் முஸம்மில் குறிப்பிட்டார்.