ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு ஒத்துழைப்ப வழங்கும் தரப்பினரை மௌனப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினரை அடக்கி ஒடுக்குவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதான தாக்குதலுக்கு நிகரானது.
இதனை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.