இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான கடல் பகுதி இலங்கைக்கு சொந்தமாகவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை போன்று 60 மடங்கு வரையான கடற்பரப்பு தற்போது இலங்கைக்குச் சொந்தமாக உள்ளது எனவும், எதிர்காலத்தில் மேலும் இலங்கையைப் போன்று 23 மடங்கு கடற்பரப்பு சொந்தமாகும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.
இந்த விடயம் குறித்து அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும், அந்த கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் இரு வருடங்களுக்குள் நிறைவடையும் எனவும் கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.