Breaking
Fri. Nov 15th, 2024
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார்.
2020இல் புகையிலையில்லா இலங்கை என்ற தொனிப்பொருளில்  சுகாதார கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பாக விளக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
20ஆம் நுற்றாண்டின் இறுதி வரை புகையிலையினால் உலகில் 100 மில்லியன் மக்கள் மரணமாகியுள்ளனர்.
வெண்சுருட்டில், 700 வகையான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 69 வகையான இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. மேலும் 250 இரசாயனங்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சுமார் 55 தொடக்கம் 60 வரையான புற்றுநோயாளிகள், புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, 23.4 வீதமானோர் இலங்கையில் புகைப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். மாணவர்களில் 3 வீதமானோருக்கு புகைப்பழக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post