Breaking
Sun. Jan 5th, 2025

இலங்கையின் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்பு அளப்பரியது. – தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் முஹ்லிஸ் வஹாப்தீன்

இலங்கையின் சிறிய, நடுத்தர அளவிலான கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல ஊக்குவிப்புகள், செயலமர்வுகள் கருத்தரங்குகள், கண்காட்சி மூலம் சிறு உற்பத்திகளுக்குரிய உலக சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல வேலைத்திட்டங்களை செயற்படுத்துகிறது.

சந்தைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்குரிய அறிவுரைகளை வழங்குதல், உற்பத்திக்குரிய தொழில்நுட்ப அறிவுரைகளை பயிற்றுவித்தல், உற்பத்திக்குரிய நிதி உதவிகளை செய்து கொடுத்தல் போன்ற இன்னும் பல வேலை திட்டங்களை இந் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. சிறிய, நடுத்தர கைத்தொழில்களான SME’ச் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாக காணப்படுகிறது. எனவே இவற்றை தேசிய அளவுக்கு கொண்டு சென்று சர்வதேச போட்டிச் சந்தையில் அவற்றுக்கு ஒரு சந்தை வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டது.

கடந்த வருடம் பல மில்லியன் ரூபாய்கள் இதற்கு ஒதுக்கப்பட்டு வேலையில்லாப் பிரச்சினை, யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்ட பெண்கள், தமது கைத்தொழில்களுக்கு போதிய சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்ள இயலாத உற்பத்தியாளர்கள் இன்னல்களிலிருந்து இதன் மூலம் விடுவிக்கப்பட்டனர் கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு கீழ் வரக்கூடிய ஒரு நிறுவனமாக தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை இயங்கி வருகிறது. சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கணவர்களை இழந்த 120 விதவைகளுக்கான சுயதொழில் வாய்ப்புக்கள் ஊக்குவிப்பதனை நோக்காகக் கொண்டு ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையும் விரைவில் அது அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் லங்காபெல் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக இணையத்தளம் மூலம் விளம்பரம் செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் மூலம் தற்போது சுமார் 100 உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருகின்றனர் தெரிவு செய்யப்பட்ட குடிசைக் கைத் தொழில் உற்பத்தியாளர்களுக்கு உலக அளவிலான சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய பணிப்பாளர் சபை தெரிவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் மாத்திரமே கடந்துள்ள நிலையில் இவ்வாறான பாரிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.

இது போன்ற இன்னும் பல மக்கள் நல செயற்றிட்டங்களை தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கவுள்ளது என தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு.முஹ்லிஸ் வஹாப்தீன் தெரிவித்தார;

Related Post