சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மூன்று வருட திட்டத்தின் செயற்பாடுகள்தொடர்பில் நிதியத்தின் உயர் மட்ட பிரநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
நாட்டிள் நிதித்துறையை வலுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் ஓத்துழைப்பு வழங்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின்பிரநிதிகள் உறுதி தெரிவித்துள்ளனர். 150 கோடி அமெரிக்க டொலர்கள செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது
நிதியத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக தற்போதையஅரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பிரதிநிதிகள் இதன் போது பாராட்டி னார்கள்.
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்து வலுவான பொருளாதார வல்லமை கொண்ட நாடாக இலங்கையைமுன்னோக்கி நகர்த்திச் செல்வது தமது எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி நிதியத்தின் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.
இலங்கையில் வருமான வரி சேகரிக்கப்படும் நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.வரி செலுத்தும் குறைந்த வருமானம் உடைய வியாபாரிகளுக்கு சுமை ஏற்படாத வகையில் அந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும். வரி தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறுஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றனஎன்றும் ஜனாதிபதி கூறினார்.