Breaking
Sun. Nov 24th, 2024

தெற்காசியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.9 வீதமாக வீழ்ச்சியடையலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

பொதுத்துறையினருக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் அதிகரித்துள்ள செலவிடப்படும் வருமானம் போன்றவை இந்த நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும், பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவாகவிருந்த கடந்தகால முதலீடுகளை புதிய அரசாங்கம் மீளாய்வுசெய்ய ஆரம்பித்திருப்பதால் போட்டித்தன்மை தொடர்ந்தும் சவாலாக இருப்பதாகவும் உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கூடிய பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தெற்காசிய நாடுகளில் மிகவும் குறைந்தளவு முதலீடுகளையே இலங்கை பெற்றிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2015ஆம் ஆண்டு தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அதிகரித்திருப்பதுடன், 2017ஆம் ஆண்டு இதன் வளர்ச்சியானது 7.6 வீதமாக அதிகரிக்கும் என்றும், அதிகரித்திருக்கும் முதலீடுகள் மற்றும் பலமான நுகர்வுகள் மூலம் இந்த நிலைமை காணப்படுவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Post