இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியான வெலிகம பாரீ அறபுக் கல்லூரியின் 130வது வருட பூர்த்தி விழாவும் 30வது ‘அல்-ஆலிம்’ பட்டமளிப்பு விழாவும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளன.
கல்லூரி அதிபர் மெளலானா மெளலவி ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் ஹாபிழ் (மழாஹிரி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் யூ.கே.யைச் சேர்ந்த ஷைகுல் ஹதீஸ் ஹழ்ரத் மெளலானா முகம்மது ஸலீம் தவ்ராத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
விசேட பேச்சாளர்களாக இப்னு உமர் ஹதீஸ் உயர் கற்கை நெறிப்பீட பணிப்பாளர் மெளலானா மெளலவி எம்.ஜே. அப்துல் ஹாலிக் (தேவபந்தி) மற்றும் காத்தான்குடி அர்ரஷாத் அறபுக் கல்லூரி அதிபர் மெளலானா மெளலவி ஆதம் லெவ்வை (பலாஹி) ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் விசேட, கெளரவ அதிதிகளாக நாடளாவிய ரீதியில் உள்ள அறபுக் கல்லூரிகளின் அதிபர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பணிப்பாளர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.