Breaking
Tue. Dec 24th, 2024

இளவரசன் விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் வரலாற்று அடையாளங்கள் இருப்பதால், இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிதுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

குருகல பிரதேசத்தில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை மனிதர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் தெரணியகலவை ஆலோசராக நியமித்து இது சம்பந்தமாக ஆய்வுகளை நடத்த உள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

குருகல பிரதேசத்தில் பௌத்த தலமும், இஸ்லாமிய வணக்கஸ்தலமும் இருப்பதால், அவற்றை பாதுகாத்து, அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுக்கு முந்தைய விடயங்கள் தொடர்பில் அடுத்த வருடங்களுக்குள் நடவடிக்கை எடுப்படும். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post